கால பைரவர் கோவிலில் சிறப்பு ஹோமம்
ADDED :4492 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, நாளை (30ம் தேதி) சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது.கிருஷ்ணகிரி பழையபேட்டை அடுத்த பெரிய ஏரியின் மேற்கு கோடிக்கரையில் அமைந்துள்ளது சுயம்பு அருள்மிகு கால பைரவர் கோவில். இக்கோவிலில் பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று மஹா ஹோம பூஜை நடக்கிறது.நாளை (ஜூலை30) தேய்பிறை அஷ்டமியையொட்டி மஹா ஹோம பூஜை நடக்கிறது. காலை, 7.30 மணிக்கு தொடங்கும் விழாவில் மஹா கணபதி ஹோமம், காலபைரவர் கலச பூஜை, நவகிரஹ ஹோமம் நடக்கிறது.இதனையடுத்து தேய்பிறை அஷ்டமி ராகுகாலத்தில் சாம்பல் பூசனி மற்றும் தேங்காயில் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் அருள் பெறலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.