முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :4470 days ago
புதுச்சேரி: வம்பா கீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கரக வீதியுலா நடந்தது. கோவில் ஆடிமாத திருவிழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு ஜலம் திரட்டுதல் கரக ஊர்வலம் நடந்தது. 12:00 மணியளவில் சாகை வார்த்தல் மாவு காப்பு நிகழ்ச்சியும், மாலை அம்மனுக்கு கும்பம் படைத்தலும் நடந்தது. இன்று காலை அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் காப்பு நிகழ்ச்சி, மாலை விநாயகர் வீதி ஊர்வலம் புறப்படு நடக்கிறது. நாளை (1ம் தேதி) அம்மனுக்கு பழ அலங்காரம், வள்ளி தேவசேனா சமேத, சுப்பிரமணியர் வீதியுலா 3ம் தேதி புற்று அலங்காரத்துடன் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.