உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் கோயிலில் யானைக்கு ஸ்பெஷல் புல்!

திருப்புத்தூர் கோயிலில் யானைக்கு ஸ்பெஷல் புல்!

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் யானை "சிவகாமி க்காக கோயிலில், "ஸ்பெஷலாக புல் வளர்க்கப்படுகிறது. கோயில் யானை சிவகாமிக்கு தற்போது 44 வயதாகிறது.தினமும் 10 கிலோ அரிசி, பாசிப்பயறு ஒரு கிலோ,இவற்றுடன் தேவையான அளவு கொள்ளு, சீரகம், மஞ்சள்பொடி, உப்பு கலந்து சாதமாக வடித்து காலை உணவாக வழங்கப்படுகிறது.மதியம் கேழ்வரகு கூழ் வழங்கப்படுகிறது.இவற்றுடன், தினமும் 150 லிருந்து 200 கிலோ பசும் புல், உணவாக வழங்கப்படுகிறது.மழை பொய்த்து விட்டதால், கோயில் 3ம் பிரகாரத்தில், யானை ஓய்வெடுக்கும் பகுதியில், பிரத்யேகமாக,
செட்டிநாடு கால்நடை பண்ணையிலிருந்து, "கட்டிங்ஸ் வாங்கப்பட்டு, "கோ-4 புல் வளர்க்கப்படுகிறது. மேலும் தனியாக ஏக்கர் வயலிலும் புல் வளர்க்கப்படுகிறது. இதனால்,கடுமையான வறட்சியிலும், பசுமையான புற்களை, தினசரி யானைக்கு வழங்க முடிகிறது.மேலும், வழக்கமாக,சீதளிகுளத்தில் குளிக்கும் சிவகாமிக்கு,தற்போது,குளம் வறண்டு உள்ளதால்,போர் வெல் மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் எடுத்து, யானையை குளிப்பாட்டுகின்றனர். பண்ணைமேலாளர் தியாகராஜன் கூறுகையில், பக்தர்கள் அன்புடன் வழங்கும் தேங்காய்,பழத்தால் ஏற்படும் ஜீரணக்கோளாறுகளை சரி செய்ய,சூரணம் வழங்கப்படுகிறது.மேலும், 3 மாதத்திற்கு ஒரு முறை,குடற்புழு நீக்கம், பூச்சி மருந்தும் வழங்கப்படுகிறது.காலை,மாலை "வாக்கிங் உண்டு, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !