கஞ்சனூர் கோவிலில் சந்தனக்காப்பு விழா
ADDED :4468 days ago
கும்பகோணம்: கும்பகோணம் அருகே கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி (சுக்கிரன் தலம்) கோவிலில் 50ம் ஆண்டு ஆடி சுக்கிர வார சந்தனகாப்பு விழா வருகிற 2ம் தேதி நடக்கிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.அந்த வகையில் 50ம் ஆண்டு ஆடி சுக்கிர வார சந்தனகாப்பு விழா வரும் 2ம் தேதி நடக்கிறது. இதைஒட்டி பகல் 12 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு 7.30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது.இதில், மதுரை, தருமபுரம், சூரியனார்கோவில், திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்கள், திருப்பனந்தாள் காசித்திருமடம் அதிபர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.