காவடி ஊர்வலம்
ADDED :4527 days ago
புதுச்சேரி:கோவிந்தசாலையில் உள்ள அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காவடி ஊர்வலம் நடந்தது. கோவிந்தசாலையில் உள்ள அஷ்டலட்சுமி முடக்கு மாõரியம்மன் கோவில் 16ம் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது. நேற்று அம்மனுக்கு சாகை வார்த்தலும், தொடர்ந்து, காவடி ஊர்வலம் நடந்தது. வேண்டுதலின்பேரில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து ஆடினர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.