பரமசிவன் கோவில் மண்டல பூஜை
ADDED :4532 days ago
சூலூர்: காசிகவுண்டன் புதூர் பரமசிவன் கோவிலில், விநாயகர் பூஜையுடன் மண்டல பூஜை துவங்கியது. தொடர்ந்து ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. காவடியாட்டம், அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், சூலூர் வைத்திய நாத சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை வழிபாடு நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அன்னதானம் நடந்தது.