ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு
ADDED :4514 days ago
அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.ஸ்ரீமுருகன் கிருத்திகை கமிட்டி சார்பில், 61வது ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இரவு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில், சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. செயல் அலுவலர் வெற்றிச்செல்வன், கிருத்திகை கமிட்டி நிறுவனர் மாணிக்கம் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.