மீனாட்சி அம்மன் கோயிலில் ஆக. 18 ல்
ADDED :4508 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு, ஆக., 18 ல் புட்டு உற்சவம் நடக்கிறது. கோயில் இணை ஆணையர் பொ.ஜெயராமன் கூறியதாவது: ஆவணி மூல திருவிழா ஆக.,3 துவங்கி, ஆக., 21 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, உற்சவ நாட்களில் கோயில் மற்றும் உபயதாரர் சார்பில் உபயத் திருக்கல்யாணம், தங்கரதம் உலா சேவைகள் நடத்தப்படுவதில்லை. விழா முக்கிய நிகழ்ச்சியான "புட்டு உற்சவம் ஆக., 18ல் நடக்கிறது. அன்று அதிகாலை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்படாகி, புட்டுத்தோப்புக்கு சென்று, அங்கு புட்டு உற்சவம் நடந்து, இரவு கோயில் வந்து சேத்தியாகும் வரை, நடை சாத்தப்பட்டிருக்கும், என்றார்.