பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
ADDED :4504 days ago
விழுப்புரம்:வாணியம்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், வரும் 9ம் தேதி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் வளாகத்தில் , புதிதாக ஸ்ரீ ஆண்டாள் நாச் சியார் அவதரித்துள்ளார். இதனை முன்னிட்டு அவதார தினமான ஆடிப்பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, வரும் 9ம் தேதி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.இதில் மதுராந்தகம், ரகுவீரப் பட்டாச்சாரியாரின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற வேண்டுமென அறங்காவலர் முத்துராமலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.