கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோயிலில் 1008 லட்டு அர்ச்சனை
ADDED :4549 days ago
திருநெல்வேலி:கொக்கிரகுளம் முத்தாரம்மன் சமேத குருசாமி கோயிலில் 3ம் ஆண்டு முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு 1008 லட்டு அர்ச்சனை நடந்தது. ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்த 3ம் ஆண்டு முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு காலையில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், முளைப்பாரி ஊர் சுற்றி வருதல், 1008 லட்டு அர்ச்சனை, அலங்கார தீபாராதனை, செண்டை மேளம், நையாண்டி மேளம் முழங்க அம்பாள் திருவீதியுலா வருதல், படைப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ம.சிவ.மகாலிங்கம், கோமதிநாயகம், பணி நிறைவு துணை ஆட்சியர் சொக்கலிங்கம், என்.ஆர்.லெட்சுமணன், ஆறுமுகம், விஜி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.