உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கோவில்களில் ஆக, 11உஞ்ச விருத்தி நாம சங்கீர்த்தனம்

புதுச்சேரி கோவில்களில் ஆக, 11உஞ்ச விருத்தி நாம சங்கீர்த்தனம்

புதுச்சேரி:கிருஷ்ண பிரேமி பஜனை மண்டலி சார்பில், புதுச்சேரி கோவில்களில் உஞ்ச விருத்தி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.புதுச்சேரியில், கிருஷ்ண பிரேமி பஜனை மண்டலி சார்பில், ஆண்டுதோறும் உஞ்ச விருத்தி நாம சங்கீர்த்தனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஸ்ரீ மடத்து பாகவதர்களால், ஆக 11ம் தேதி நடத்தப்படுகிறது.ரெயின்போ நகர் விநாயகர் கோவிலில் காலை 7:15 மணி முதல் 8:00 மணி வரையும், பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில் 8:15 மணி முதல் 9:00 வரையும், குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலில் 9:15 முதல் 10:15 வரையும், எல்லைப்பிள்ளை சாவடி சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் 10:30 முதல் பகல் 12:30 மணி வரையும் நடக்கிறது.உஞ்ச விருத்தி நாம சங்கீர்த்தனத்தில் கலந்துகொண்டு பொருளுதவி அளித்து ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள் பெறுமாறு, கிருஷ்ண பிரேமி பஜனை மண்டலியினர் கேட்டு கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !