கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம்
ADDED :4410 days ago
புதுச்சேரி:திருக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இக்கோவில் செடல் திருவிழா கடந்த 7ம் தேதி துவங்கியது. தினமும் அம்மன் வீதியுலா நடந்து வந்தது. முக்கிய உற்சவமான, செடல் உற்சவம் ஆக, 9 காலை நடந்தது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சாகை வார்த்தல் மதியம் நடந்தது.விழாவையொட்டி, புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டி உறுப்பினர் முத்தழகன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஊர்பிரமுகர்கள் சண்முகம், ரமேஷ் உட்பட பலர் கலந்துகலந்து கொண்டனர்.