மகாலட்சுமி குபேரர்வளையலணி அலங்காரம்
ADDED :4410 days ago
விழுப்புரம்:விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள திருநகர் மகாலட்சுமி குபேரர் கோவிலில் ஆடி பூரம் விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 4 மணிக்கு தாயாருக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பின்னர், காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பகல் 11 மணிக்கு தாயார் வளையலணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவருக்கு வளையல் அலங்காரம் செய்து, மூலவர் ஆண்டாள் அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மாலை 5 மணிக்கு கோவிந்தாபுரம் வெங்கடேச பாகவதர் நாம சங்கீர்த்தனம் நடந்தது. தாயாருக்கு அணிவித்த வளையல்கள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.