அம்மனுக்கு வளைகாப்பு அணிவிப்பு
ADDED :4411 days ago
ஆட்டையாம்பட்டி: காக்காபாளையம் அருகில், கோல்டன் கார்டனில் அமைந்துள்ள ஜெயதுர்க்கா அம்மனுக்கு, ஆடிப்பூரம் தினத்தை முன்னிட்டு, புத்திர சந்தனம் வேண்டுவோருக்காகவும், உடல் நலன் பெற வேண்டுவோருக்காகவும், வளைகாப்பு விழா நடந்தது.ஜெயதுர்க்கா அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியில், பெண்கள் அம்மனுக்கு பொட்டு இட்டு, பூ வைத்து, கைகளில் வளையல் அணிவித்து ஆரத்தி எடுத்தனர். ஜெயதுர்க்கா அம்மன் சிங்க வாகனத்தில் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.