உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைப்பாடியில் பால்குட ஊர்வலம்

இடைப்பாடியில் பால்குட ஊர்வலம்

இடைப்பாடி: இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் உள்ள மாரியம்மன் திருவிழாவையொட்டி நடந்த பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இடைப்பாடி, கவுண்டம்பட்டியில், பருவதராஜகுல சமுதாயத்துக்கு சொந்தமான மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு விழா, கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஆக, 9, இடைப்பாடி கவுண்டம்பட்டி குமரன்பேட்டை பகுதியில் இருந்து கோவில் வரை, 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.பின்னர், மாரியம்மன் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !