சரஸ்வதி கடாட்சம் கிடைக்க!
ADDED :4553 days ago
மதுரையில் புகழ்பெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். ராஜமாதங்கி சியாமளா பீடமாக அமைந்த தலம் இது! இங்கே சுந்தரேஸ்வரர் கோயிலில், தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரில், தனிச் சன்னதியில் அருள்கிறாள் சரஸ்வதிதேவி. வெள்ளிக்கிழமைகளில், மாலை வேளையில் இங்கு நடைபெறும் வீணை வழிபாட்டில் கலந்துகொண்டு, சரஸ்வதியை மனதார வழிபட கல்வி, கேள்விகளில் மேன்மை அடையலாம்.