கோட்டை மாரியம்மனுக்கு இன்று வசந்த உற்சவம்
ADDED :4762 days ago
சேலம்: கோட்டை மாரியம்மனுக்கு இன்று மாலை, வசந்த உற்சவம், நடைபெறுகிறது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம், 23ம் தேதி, பூச்சாட்டுதலுடன் ஆடிப்பண்டிகை தொடங்கியது. பண்டிகையை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து சென்றனர். கடந்த, 7ம் தேதி, பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு, சத்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது. மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், சத்தாபரண திருவீதி புறப்பாடு நடந்தது. இன்று முக்கிய நிகழ்ச்சியாக மாலை, 4 மணிக்கு, வசந்த உற்சவம் நடைபெறுகிறது. முன்னதாக, காலை அம்மனுக்கு அபிஷேகமும், மதியம் அலங்கார ஆராதனையும் நடக்கிறது.