உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் விழா

முத்துமாரியம்மன் கோவில் விழா

ஓசூர்: ஓசூர், மாருதி நகர் முத்துமாரியம்மன் கோவில், 25வது ஆண்டு உற்சவ விழா நடந்தது. இதையொட்டி, ஓசூர், ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து தாய் வீட்டு சீதனம், இந்த கோவிலுக்கு எடுத்து வந்து விஷேச பூஜைகள் நடந்தது. அதன் பின் அம்மன் ஊர்வலம் நடந்தது. மாருதி நகர், கலைஞர் நகர், கிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர், சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி வழியாக அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., நகர துணைச் செயலாளர் மதன் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். கவுன்சிலர் முத்துராஜ், தே.மு.தி.க., மணி, ஓட்டுனர் விழா கமிட்டி நிர்வாகிகள் ஸ்ரீதர், சேகர், கண்ணன், ரகு, நாராயணன், சதீஷ், நஞ்சப்பா, மணியரசு, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !