ஆடிப்பூர விழா
ADDED :4543 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி மேல்புதூரில் உள்ளது அருள்மிகு பெரியமாரியம்மன் கோவில். இந்த கோவிலின் ஆடிப்பூர திருவிழா கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, 10 மணிக்கு பக்தர்கள் அலகு குத்திக்கொண்டும், தீச்சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். மேலும், அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியமாரியம்மன் அம்மன் ஊர்வலம் நடந்தது. மாலை, 6 மணிக்கு தீமிதி நிகழ்ச்சி நடந்தது. விழாவில், மேல்பட்டி, கீழ்புதார், மேல்புதூர், பெருமாள் நகர், மோட்டூர், லைன்கொள்ளை, மேல் சோமார்பேட்டை, கீழ் சோமார்பேட்டை, நாயுடு தெரு, ஆனந்த நகர், எம்.ஜி.ஆர்., நகர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிப்பு, ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.