காளையார் கோவில் முத்துமாரியம்மன் கோயில் பால்குடம்
ADDED :4472 days ago
காளையார்கோவில் காளையார்கோவில், தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவம் விழா, ஆக.,6ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து, அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர். முளைப்பாரி உற்சவ விழா நாளை நடக்கிறது