பழநி கோயில் உண்டியலில் ரூ.1.38 கோடி வசூல்
ADDED :4546 days ago
பழநி: பழநி கோயில் உண்டியலில், 27 நாட்களில், 1.38 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. இதில், ரொக்கமாக ஒரு கோடியை 38 லட்சத்து 76510 ரூபாய், தங்கம் 512 கிராம், வெள்ளி 7 32 கிராம், வெளிநாடுகளின் கரன்சி 1384 இருந்தது. இவை 27 நாட்களில் வசூலானது. இவை தவிர,தங்கம், வெள்ளியில் ஆன, தாலி,மோதிரம், ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, போன்றவையும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் எண்ணிக்கையின் போது, இணை கமிஷனர்(பொ) ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்காளர் ஜெயப்பிரகாசம் உடனிருந்தார்.