உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறியாத வருவாய் துறை

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறியாத வருவாய் துறை

இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட @காவில் நிலங்கள் குறித்த தகவலை, வருவா#த் துறை குறுந்தகடாக அளிக்க @வண்டும் என, நான்கு ஆண்டுகளுக்கு முன், அரசாணை வெளியிடப்பட்டது. எனினும், பல மாவட்டங்களில் உள்ள @காவில் நிலங்கள் குறித்த தகவல்கள் திரட்டப் படாததால், இப்பணி முடங்கி இருக்கிறது. 38,689 @காவில்கள்  தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 38,689 @காவில்கள் உள்ளன. இக்கோவில் மற்றும் அறநிலையங்களுக்குச் சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. எனினும், ஒவ்வொரு @காவிலுக்கும் சொந்தமாக எவ்வளவு நிலங்கள் உள்ளன; அவை தற்@பாது யாரிடம் உள்ளது; அவற்றின் சந்தை மதிப்பு என்ன, @பான்ற விவரங்கள், இந்து சமய அறநிலையத் துறையிட@மா, அந்தந்த @காவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர்களிட@மா,  இல்லை. பல்லாண்டுகளாக, @காவில் நிலங்களில் அத்துமீறி நுழைந்து, அவற்றை ஆக்கிரமிப்பு செ#வது, தொடர் கதை. இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, 2009ல், அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, @காவில்களுக்குச் சொந்தமான, நிலங்கள் தொடர்பான, வருவாயத் துறையின் ஆவணங்களை, மாவட்ட வாரியாக சேகரித்து, அவற்றை ஸ்கேன் செய்து, குறுந்தகடாக பதிவு செய்ய @வண்டும்; இதற்கான  அனைத்து செலவுகளையும், இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக்கொள்ள @வண்டும் என, அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டது. ஆணை கூறுவது என்ன? அதற்கு ஏதுவாக, இனாம் பதிவேடு தொடர்புடைய ஆவணங்கள், சென்னை ஆவண காப்பகத்தில் கிடைக்கும் என்பதால், அவற்றை நில நிர்வாக ஆணையர் மூலமாகவும், நில அளவை பதிவேடு மற்றும் நிலவரித் திட்ட அலுவலரின் உத்தரவு நகல்களை சம்பந்தப்பட்ட, கலெக்டர் மூலமாகவும் பெற ஆணையிடப்பட்டது.  இத்துடன், நில அளவை வரைபடம் தொடர்பான ஆவணங்களை, இணை இயக்குனர், சென்னை மத்திய நில அளவை அலுவலகத்தின் மூலமாகவும் பெற்று, அவை அனைத்தையும் குறுந்தகடுகளில் பதிவு செய்து,  அரசுக்கு வழங்க, வருவாய்  துறையின் முதன்மை செயலர்  மற்றும் நில அளவை மற்றும்  நிலவரித் திட்ட ஆணையருக்கு,  ஆணையிடப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டு களாகியும், இத்திட்டம் கிடப்பில் உள்ளது. வருவா#த் துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், கடந்த நான்காண்டுகளில் ஆக்கிரமிப்புகள் அடி@யாடு குறைந்திருக்கும். பல கோவில்களின் நிலங்கள் குறித்த மூல ஆவணங்களை, அதைப் பொறுப்பில் வைத்திருந்த பலர் முறைகேடாக சொந்த சொத்தாக மாற்றி, வில்லங்கப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறப்பு சட்டங்கள் இல்லை "சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழி இருந்தாலும், இதற்கு என அண்டை மாநிலமான ஆந்திரா போல அறநிலையத் துறைக்கு என்று தனியான சிறப்பு சட்டங்கள், தமிழகத்தில்  இல்லை. முன்பு மன்னர்கள் ஏடுகளில் எழுதித் தந்த சொத்துக்கள், கல்வெட்டில் காட்டப்பட்ட சொத்துக்கள் தவிர, அந்தந்த ஊர் பிரமுகர்கள் தலைமுறை தலைமுறையாக எழுதி வைத்த சொத்துக்களை முதலில் கண்டறிந்து ஒழுங்குபடுத்தும் முயற்சிகளை, இச்சட்டம் வந்த பின், ஏன் செயல்படுத்தவில்லை? அதற்குரிய நிதி இல்லையா  அல்லது  வருவாய்த் துறை அளித்த ஒத்துழைப்பு என்ன என்பது தொடர் கேள்விகள். அதே சமயம் நித்திய வழிபாட்டுக்கும், பராமரிப்புக்கும் தடுமாறும் நிலையில் பல ஆயிரம் கோவில்கள் வந்து  விட்டன. ஒரு பக்கம் நிர்வாகத்தில், அரசு சில நடைமுறைகள் உருவாக்கிய போதும், கோவில் சொத்துக்கள் குறித்த சான்றாவணங்களை திரட்டுவதில் அதிக முனைப்பு காட்டியிருந்தால், இன்று கோவில் சொத்துக்கள் பெருமளவு  மீட்கப்பட்டிருக்கும். வழிகாட்டி நெறிமுறை இனியாவது இத்திட்டம் எந்த அளவுக்கு செயல்படும் என்ற கேள்விக்கு, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர், ராஜா கூறுகையில், ""திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் வராத @காவில் நிலங்கள் பற்றிய தகவல்களை, விரைவில், உரிய அதிகாரிகள் அளிப்பர், என்றார். இருப்பினும், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் ஆனந்தனும், வருவா#த் துறை அமைச்சர் வெங்கடாசலமும் ஒருங்கிணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை  உருவாக்க, முயற்சித்தால் ஒழிய பயன் வராது. மாறாக, கோவில்களில் அன்னதானம் போடும் பணி அல்லது கும்பாபிஷேகம் செய்த கணக்கு வழக்கு பட்டியல் என்று மட்டும் கவனித்தால், ஆக்கிரமிப்பாளர்கள் காட்டில் மழை தான் என்ற கருத்து,  பக்தர்களிடம் எழுந்திருக்கிறது.  ஆண்டவனுக்கு @சர @வண்டிய சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சென்று கொண்டிருக்கிறது என்ற புகார் பட்டியல் நீளுகிறது. தி.மு.க.,வினர் மீது கொடுக்கப்பட்ட நில ஆக்கிரமிப்பு புகார்கள் குறித்து, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது @பால், @பார்க்கால அடிப்படையில், கட்சி பேதமின்றி இப்பிரச்னைக்கு தீர்வு காண  @வண்டிய காலம் வந்து விட்டது. இல்லாவிட்டால், தமிழக நாகரிகத்தை பிரதிபலிக்கும் கோவில்கள், வெறும் புராதனச் சின்னங்களாக மாறி விடும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !