உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயன பெருமாள் கோவிலில்திருவிளக்கு பூஜை

ஸ்தலசயன பெருமாள் கோவிலில்திருவிளக்கு பூஜை

மாமல்லபுரம்:ஸ்தலசயன பெருமாள் கோவிலில், வரும் 15ம் தேதி, திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இக்கோவிலில், ஸ்தலயசன பெருமாள், நிலமங்கை தாயார் ஆகியோர், பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர். வரும் 15ம் தேதி, இக்கோவிலில், உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தாயார் சன்னிதி மகாமண்டபத்தில், அன்று மாலை 4:30 மணி முதல், இரவு 7:00 மணி வரை நடைபெறும் பூஜையில், பெரிய குத்துவிளக்குகளில், தீபமேற்றி, லட்சுமி அஷ்டோத்ரம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையுடன், சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்யப்படும். இதில், பங்கேற்க விரும்பும் பெண்கள், கோவில் நிர்வாகத்தை, 044  2744 3245 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !