கூனிச்சம்பட்டு கோவிலில்108 பால்குட அபிஷேகம்
ADDED :4476 days ago
திருக்கனூர்:கூனிச்சம்பட்டு பேட் முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தையொட்டி, அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு பேட் முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றதுடன் துவங்கியது. நேற்று காலை அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. அதையொட்டி, காலை 8:00 மணிக்கு பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இன்று (13ம் தேதி) காலை 10:00 மணிக்கு செடல் உற்சவமும், பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தலும் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.