உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படவேட்டம்மன் கோவிலில்கூழ்வார்த்தல் திருவிழா

படவேட்டம்மன் கோவிலில்கூழ்வார்த்தல் திருவிழா

திருப்போரூர்:படவேட்டம்மன் கோவிலில், கூழ்வார்த்தல் திருவிழா சிறப்பாக நடந்தது.திருப்போரூரில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடிமாத திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, கரக ஊர்வலம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு, மகா அபிஷேகமும், விசேஷ தீப, தூப ஆராதனையும் நடந்தது. இரவு 10:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் எழுந்தருளி, இன்னிசை வாத்தியம் ஒலிக்க, வாண வேடிக்கையுடன் வீதியுலா வந்தார். கிராம மக்கள், வீடுகள் தோறும் கோலம் இட்டு, அர்ச்சனை செய்து, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !