உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேளியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல்

கேளியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல்

விழாகேளம்பாக்கம்:கேளியம்மன் கோவிலில், ஊரணி பொங்கல் விழா சிறப்பாக நடந்தது.கேளம்பாக்கம்  வண்டலூர் சாலையில், கேளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், ஆடி திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு விழா, கடந்த 9ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது. பக்தர்கள், ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !