உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 17ம் தேதி புஷ்ப அலங்கார உற்சவம்

17ம் தேதி புஷ்ப அலங்கார உற்சவம்

காஞ்சிபுரம்:ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் கோவிலில், வரும், 17ம் தேதி புஷ்ப அலங்கார சேவை உற்சவம் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, ஐயங்கார்குளம் கிராமத்தில், சஞ்சீவிராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புஷ்ப அலங்கார சேவை உற்சவம் காலை 8:00 மணி அளவில், மங்கள இசையும், காலை 8:30 மணிக்கு சஞ்சீவிராயர், கோதண்டராமர், சீதை, லட்சுமணர் ஆகியோருக்கு திருமஞ்சனமும், 10:30 மணி அளவில் மூலவர் சஞ்சீவிராயருக்கு புஷ்பாங்கி அலங்கார உற்வசமும், 12:00 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையில், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !