உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருவாலங்காடு:தேவி கருமாரியம்மன் கோவிலில், நடந்த தீமிதி திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் குப்பம்கண்டிகை கிராமத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், இந்தாண்டின், தீமிதி திருவிழா, கடந்த, 1ம் தேதி துவங்கியது.அன்று மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதியுலா நடந்தது. நேற்று முன்தினம், பகல், 1:30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து தீ மிதித்தனர்.தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலைநிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !