உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

தர்மபுரி: தர்மபுரி, ஸ்ரீ சக்தி சொர்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில், 24ம் ஆண்டு ஸ்ரீசுப்பிரமணியர், வள்ளி,தெய்வாணை திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா நேற்று (ஆக.,12) துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை, 6 மணி வரை கணபதி பூஜை, மஹா பூர்ணாஹூதி,108 சங்காபிஷேகம் நடந்தது. காலை, 9 மணிக்கு ஸ்ரீசுப்பிரமணியர், வள்ளி, தெய்வாணைக்கு திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் மற்றும் வள்ளி, தெய்வாணை ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மதியம்,12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இன்று (ஆக.,13) காலை, 9 மணிக்கு ஸ்ரீசக்தி சொர்ணமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பொங்கல் வைத்தல், வெள்ளி கவசம் சாத்துதல் நடக்கிறது. மதியம், 2 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஆக.,14) காலை, 9 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், மதியம், 2 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது. இரவு, 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !