உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பண்டிகை நிறைவு கோட்டை மாரியம்மனுக்கு இன்று பால் அபிஷேகம்

ஆடிப்பண்டிகை நிறைவு கோட்டை மாரியம்மனுக்கு இன்று பால் அபிஷேகம்

சேலம்: கோட்டை மாரியம்மனுக்கு இன்று (13ம் தேதி), 1,008 லிட்டர் பால் அபிஷேகத்துடன், ஆடிப்பண்டிகை நிறைவடைகிறது.சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை கடந்த மாதம், 23ம் தேதி, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 3ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 7ம் தேதி பொங்கல் விழாவும், நேற்று முன் தினம் சத்தாபரணமும், நேற்று வசந்த உற்சவமும் நடந்தது. ஆடிப்பண்டிகை நிறைவு நாளான இன்று, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.பகல், 12 மணிக்கு, 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி ஆகிய திரவியங்களால், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார ஆராதனையும் நடக்கிறது. மகா அபிஷேகத்துடன், 22 நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்ட, ஆடிப்பண்டிகை நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !