வரதராஜ பெருமாளுக்குவிவாக மகோற்சவம்
ADDED :4473 days ago
விழுப்புரம்:அரசமங்கலம் வரதராஜ பெருமாளுக்கு விவாக மகோற்சவம் விழா நடந்தது.ஆடிப்பூரத்தையொட்டி விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் பெரும்தேவி சமேத, வரதராஜ பெருமாளுக்கு விவாக மகோற்சவம் விழா நடந்தது. கடந்த 9ம் தேதி மாலை 5 மணிக்கு சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. பின், வைதீக காரியங்கள் நடந்தன. இரவு 8 மணிக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது.பிரகார புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வெங்கடேஷ்பாபு செய்திருந்தார்.