ரங்கநாதர் கோவிலில் 15ம் தேதி படிவிழா
ADDED :4474 days ago
செஞ்சி:சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் 15ம் தேதி படி விழா நடக்க உள்ளது.செஞ்சி வட்ட மதுரகவி ஆழ்வார் செந்தமிழ் வேதசபை, மரக்கோணம், தேவனூர் எம்பெருமனார் சபை சார்பில் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் 15ம் தேதி படிவிழா நடக்கிறது. காலை 8.30 மணிக்கு துவங்கி 11 மணிக்கு படிவிழா நிறைவு செய்கின்றனர். 11.30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், 1.30 மணிக்கு ததியாராதனை நடக்கிறது. செஞ்சி பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் பஜனைக் குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.