உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களுக்கு துணி பைகள் வினியோகம்

பக்தர்களுக்கு துணி பைகள் வினியோகம்

பெரியபாளையம் : பவானியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, பெரியபாளையம் ஊராட்சி மன்றம் சார்பில், துணி பைகள் வினியோகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் மறு சுழற்சிக்கு பயன்படாத, பிளாஸ்டிக் பொருட்களை, அரசு தடை செய்துள்ளது. இந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், நிலத்தடி நீர்மட்டம் பாதித்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே, பொதுமக்கள், காகித பைகள் பயன்படுத்த அரசு வலியுறுத்தி வருகிறது. ஆடி மாதத்தை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு, அதிகளவு பக்தர்கள் வந்து, அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இவர்கள் பெருமளவு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெரியபாளையம் ஊராட்சி மன்றம் சார்பில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ரவிச்சந்திரன் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, கவுன்சிலர்கள் மற்றும் லர் துணிபைகள் வினியோகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !