நெல்லை டவுனில் திருஆடிப்பூர விழா 63 நாயன்மார்கள் ரதவீதிகளில் வீதியுலா
ADDED :4468 days ago
திருநெல்வேலி:திருஆடிப்பூரத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் 63 நாயான்மார்கள் வீதியுலா நடந்தது. திருஆடிப்பூர விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் ஆகியோர் கைலாயத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. சுந்தரமூர்த்தி நாயனார், யானை வாகனத்திலும், சேரமான் பெருமான் குதிரை வாகனத்திலும் எழுந்தருளில் ரதவீதிகளில் வலம் வந்தனர். இவர்கள் எழுந்தருளும் வைபவத்தின் போது நாயன்மார்கள் அனைவரும் வீதியுலாவுக்கு எழுந்தருளி வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 63 நாயன்மார்களும் ரதவீதிகளில் எழுந்தருளி வீதியுலா வந்த காட்சி பக்தர்களை பரவசம் அடைய செய்தது.