உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் வடை, பாயசத்துடன் பொது விருந்து!

கோவில்களில் வடை, பாயசத்துடன் பொது விருந்து!

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிக வருவாய் வரும் கோவில்களில், நேற்று பக்தர்களுக்கு, வடை, பாயசத்துடன் தடபுடல் விருந்து அளிக்கப்பட்டது. "கடமைக்கு வழங்கப்படும் உணவு வகை போல் அல்லாமல், ருசியுடன் விருந்து வழங்கப்பட்டது, பக்தர்களிடம் வரவேற்பை பெற்றது.தமிழகத்தில், அதிக வருவாய் வரும் அனைத்து கோவில்களிலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது; பொது விருந்து அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள, பிரசித்தி பெற்ற கோவில்களில், அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.காலையில், சிறப்பு வழிபாடு முடிந்தவுடன், பொது விருந்து வழங்கப்பட்டது. அரிசி சாதத்துடன், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளம், வடை, கேசரி போன்றவை பரிமாறப்பட்டன.பொது விருந்தில், ஏழை எளிய பக்தர்களோடு, அமைச்சர்களும், அதிகாரிகளும் உணவு அருந்தினர். சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர்களும், எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொண்டனர். பொது விருந்து நடந்த கோவில்களில், குறைந்தபட்சம், 300 பேருக்கு, உணவு தயாரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !