உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவிலில் இலவச லட்டு பிரசாதம்

ஷீரடி சாய்பாபா கோவிலில் இலவச லட்டு பிரசாதம்

ஷீரடி:நாட்டின் பணக்கார கோவில்களில் ஒன்றான, ஷீரடி சாய்பாபா கோவிலில், இலவச லட்டு பிரசாத வினியோகம் துவக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மூன்று லட்டுக்கள் கொண்ட பாக்கெட், 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக, மும்பை ஐகோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டனர். அதன்படி, நேற்று முதல், இலவச லட்டு பாக்கெட் வழங்கப்படுகிறது. இதுதவிர, கூடுதலாக லட்டு பாக்கெட் தேவைப்படுவோர், 20 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக, கோவிலின் தலைமை அதிகாரி, யஷ்வந்த் மானே கூறியதாவது: பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்குவதற்காக, நாள் ஒன்றுக்கு, 60,000 லட்டுக்களும், ஆண்டு ஒன்றுக்கு, 2.25 கோடி லட்டுக்களும் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு, 13 கோடி ரூபாய் செலவாகும். கடந்த ஆண்டு, சாய்பாபா டிரஸ்ட்க்கு, 450 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது தவிர, 300 கிலோ தங்கமும், 3.50 டன் வெள்ளிப் பொருட்களும் காணிக்கையாக கிடைத்துள்ளன.இவ்வாறு அதிகாரி யஷ்வந்த் மானே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !