உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரமாகாளியம்மன் கோவிலில் இன்று குத்துவிளக்கு பூஜை

வீரமாகாளியம்மன் கோவிலில் இன்று குத்துவிளக்கு பூஜை

கும்பகோணம்: நாச்சியார்கோவிலில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை இன்று நடக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் வடக்குவீதியில் பிரசித்திபெற்ற வீரமாகாளியம்மன்கோவில் உள்ளது. பழமையும் சிறப்பும் பெற்ற இக்கோவில் கடந்த சில மாதங்களுக்கு முன் பல லட்சம் செலவில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்தாண்டு முதல் ஆடி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கு பூஜை தொடங்குவது என கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதையொட்டி ஆடி வெள்ளிக்கிழமையான இன்று மாலை வீரமாகாளியம்மன்கோவிலில் குத்துவிளக்கு பூஜை தொடங்கி நடக்கிறது. குத்துவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வீரமாகாளியம்மன்கோவில் நிர்வாகிகள், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !