உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழை மரத்துக்கு திருமாங்கல்யம்!

வாழை மரத்துக்கு திருமாங்கல்யம்!

திருச்சி - மண்ணச்சநல்லூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள திருபைஞ்ஞீலியில் விசாலாட்சி சமேத ஞீலிவனநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் கல்வாழை. இங்கே, வாழை மரத்துக்கு திருமாங்கல்யம் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். எமதருமனுக்கு, சிவனருளால் இழந்த பதவி மீண்டும் கிடைத்த தலம் இது என்பார்கள். இங்கு வந்து வழிபட வேலைவாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும்; இங்குள்ள எமன் சன்னதியில், ஆயுஷ் ஹோமம் செய்து வழிபட, எம பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !