உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செந்தாமரையில் சூரியன்!

செந்தாமரையில் சூரியன்!

சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள பனிமல்லிகேஸ்வரர் ஆலயத்தில், நவக்கிரக மூர்த்தியர் சிறப்புத் தரிசனம் தருகிறார்கள். நடு நாயகமாகத் திகழும் சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் செந்தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். தேர்ச்சாரதியாக அருணனும் உள்ளான். அதேபோன்று சந்திரன் வெண்தாமரையிலும், செவ்வாய் அன்ன வாகனத்துடனும், புதன் - குதிரை வாகனத்துடனும், குரு - யானை வாகனம் கொண்டும், ராகு - கேது முறையே கருடன் மற்றும் சிம்ம வாகனத்துடனும் அருள்புரிகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !