உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்மை தருவார் கோயிலில் மாகாளியம்மனுக்கு பாலாபிஷேகம்

நன்மை தருவார் கோயிலில் மாகாளியம்மனுக்கு பாலாபிஷேகம்

ஆண்டிபட்டி: நன்மை தருவார் கோயிலில், 49 அடி உயர மாகாளியம்மனுக்கு பாலாபிஷேகம், பூச்சொறிதல் விழா நடந்தது. மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடந்த விழாவில், லால்பாபாஜி தலைமை வகித்தார். விழாவில் 49 அடி உயர மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்தனர். 108 குடம் பாலாபிஷேகம் செய்து, மலர்களால் தூவி வழிபாடு செய்தனர். மாங்கல்ய பூஜை, ஹோம பூஜைகள் நடந்தது. மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !