முனியப்பன் கோயிலில் அதிகாரிகள் கிடா வெட்டி வழிபாடு!
ADDED :4458 days ago
மேட்டூர்: மேட்டூர் அணையில் பொதுப்பணிதுறை அதிகாரிகள் இன்று வழிபாடு செய்தனர். ஆண்டு தோறும் மேட்டூர் அணை நிரம்பியதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை முனியப்பன் கோயிலில் கிடா வெட்டி, நேர்த்திகடன் செய்வது வழக்கம் இதன்படி கடந்த 4ம் தேதி அணை நிரம்பியது. இதனைத்தொடர்ந்து இன்று காலை இக்கோயிலில் அதிகாரிகள் வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல அதிகாரி பைந்தமிழ்செல்வன், செயற்பொறியாளர் கந்தசாமி மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.அணையின் நீர்மட்டம் 118.620 அடி உள்ளது. நீர் இருப்பு 91.287 டி.எம்.சியும் உள்ளது.