மதுரை ஆவணி மூல திருவிழா.. புட்டு உற்சவம் கோலாகலம்!
ADDED :4512 days ago
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில், ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு, புட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஆவணி மூல திருவிழா ஆக.,3 துவங்கி, ஆக., 21 வரை நடக்கிறது. விழா முக்கிய நிகழ்ச்சியான புட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்படாகி, புட்டுத்தோப்புக்கு சென்று, அங்கு புட்டு உற்சவம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.