உலக நன்மை வேண்டி 108 கோமாதா பூஜை
ADDED :4513 days ago
சூலூர்: வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் உலக நன்மை வேண்டி கோமாதா பூஜை நடந்தது.உலக சமாதான தெய்வீக பேரவை சார்பில், மழை மற்றும் உலக நன்மை வேண்டி, 108 கோமாதா பூஜை மற்றும் வேள்வி நடந்தது. காலை 6.00 மணிக்கு கணபதி பூஜையுடன் ஹோமம் துவங்கியது. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கு உரிய கோமாதா பூஜை நடந்தது. காமாட்சிபுரி சித்தர் பீட சிவலிங்கேஸ்வர சுவாமி பூஜையை நடத்தி வைத்தார். பேரவை தலைவர் முருகசாமி தலைமை வகித்தார். பேரூராதீன இளையபட்டம் மருதாசல அடிகள், கவுமார மடாலய ஆதீனம் குமரகுருபர சுவாமி ஆசியுரை வழங்கினர்.