உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி சிறப்பு தொழுகை

மழை வேண்டி சிறப்பு தொழுகை

கீழக்கரை: கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்கு தெரு கிளை சார்பில் மழைவேண்டி சிறப்பு தொழுகை கிஸ்கிந்தா திடலில் நடந்தது. கீழக்கரை மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் மழை பொய்த்ததால் கிணறுகளிலும், ஊரணிகளிலும் நீர் ஆதாரம் குறைந்து மக்கள் தண்ணீருக்கு சிரமமடைகின்றனர். இதை தொடர்ந்து மாநில பேச்சாளர் அர்சத் அலி மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினார். மாவட்ட துணை தலைவர் நசுருதீன்,நிர்வாகிகள் ஜகுபர் சாதிக்,உமர் பாரூக், ஹாஜாமுகைதீன், சபீக்,சுல்த்தான்,அமீர் அப்பாஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !