உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா

ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா

வேதாரண்யம்: நாலுவேதபதி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நடந்த ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், ஆடிப்பூர விழா வெகுவிமரிசையாக நடந்தது. இதில் நேற்று முன்தினம் கலச வேள்வி பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக அதிகாலை, நான்கு மணியளவில் சக்தி கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சிக்கலயம் எடுத்தும், பாலாபிஷேகம் செய்தும் வழிபட்டனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலை, மூல விக்ரஹத்துக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹாதீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாட்டை வாரவழிபாட்டு குழுவினர், பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !