விநாயகர் கோவிலில் 108 கலச பூஜை
ADDED :4498 days ago
சூலூர்: சூலூர் அருகே உள்ள காடாம்பாடி பெரிய விநாயகர் கோவிலில் உலக நன்மை வேண்டி 108 கலச பூஜை நடந்தது.நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலசங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தினர். திருப்பூர் அலகுமலை ஸ்ரீ தபோவன நிறுவனர் குஹப்பிரியானந்த சரஸ்வதி சுவாமினி கலச பூஜையை நடத்தி வைத்தார். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு பூ, பழம், வளையல்கள், மாங்கல்ய சரடு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஆன்மிக பஜனை பாடல்கள் பாடப்பட்டன.