அன்னதானம் எத்தனை வகை?
ADDED :4472 days ago
அன்னதானம் செய்வது என்றால் இல்லாதோர்க்கு உணவளிப்பது என்று மட்டுமே பொதுவாக எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், உணவிடுதல் யாருக்கு என்பதனை ஒட்டி அதனை மூன்று வகையாகப் பிரித்து வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன புராணங்கள். ஆண்டவனின் அடியவர்களுக்கு அன்னமளித்தல், மாகேஸ்வர பூஜை, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், ஆலயச் சிப்பந்திகளுக்கும் உணவிடுதல், அன்னம் பாலிப்பு. ஏழைகள் வயிறார உண்டி கொடுத்தல், அன்னதானம்.