தங்க பிள்ளையார் கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :4754 days ago
திருப்போரூர்: தங்க பிள்ளையார் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது. திருப்போரூர், பஜார் வீதியில், பல்லவர் கால சிறப்பு கொண்ட தங்க பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா, உற்சவர் வீதி உலாவுடன் விமரிசையாக நடைபெறும். அதன்படி, இம்மாத விழா, நேற்று முன்தினம், விநாயகர் சதுர்த்தியை ஒட்டிய மகா சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதில், பக்தர்கள் தங்க பிள்ளையாருக்கு அருகம்புல், புஷ்ப மாலை, சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதை தொடர்ந்து, வீதி உலா உற்சவம் நடந்தது. வழிநெடுக பக்தர்கள் அர்ச்சனை செய்து, விநாயகரை வழிபட்டனர்.