கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா
ADDED :4528 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஆவணி மாத கிருத்திகை விழா, நேற்று நடந்தது. பக்தர்கள் பிரார்த்தனையாக, மொட்டையடித்து, சரவண பொய்கையில் நீராடி, கந்தனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்தனர். காது குத்தல், துலாபாரமும் நடந்தது. மாலை, உற்சவர் அபிஷேகம் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபட்டனர்.