உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி  திண்டிவனம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 36 அடி உயர ஆஞ்ஜநேயர் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, ராமருக்கு விஷேச பூஜைகள் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. அப்போது வெண்ணெய்தாழி அலங்காரத்தில் ராமர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சீடை, முறுக்கு, அதிரசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சவடீ ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !